Categories
மாநில செய்திகள்

VIDEO: நேருக்கு நேர் மோதி பேருந்து விபத்து… 40 பேர் மருத்துவமனையில்….. பதைபதைக்க வைக்கும் சம்பவம்…..!!!!

சேலம் மாவட்டம் எடப்பாடி பேருந்து நிலையத்திலிருந்து தனியார் பேருந்து நாற்பதிற்கும் மேற்பட்ட பயணிகளுடன் சதுரகிரியை நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது தனியார் பேருந்தும் தனியார் கல்லூரி பேருந்தும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் இரண்டு பேருந்துகளும் புளிய மரத்தில் சாய்ந்து விபத்திற்குள்ளானது. உடனே தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் பயணம் செய்த கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் தனியார் பேருந்தில் பயணம் செய்த பயணிகள் படுகாயம் அடைந்த நிலையில் அவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்தில் மாணவ மாணவியர் உட்பட 40 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.மழை நேரத்தில் ஏற்பட்ட இந்த கோர விபத்தில் உயிர் இழப்புகள் எதுவும் ஏற்படவில்லை. தனியார் பேருந்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் மனதை பதைபதைக்க வைக்கும் இந்த சம்பவம் பதிவாகி உள்ளது.

Categories

Tech |