Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“விக்கியிடம் நயன் ரசிகர்கள் விடுத்த கோரிக்கை”…. நிறைவேற்றிய விக்கிக்கு நன்றி கூறும் ரசிகாஸ்…!!!!

தங்களின் கோரிக்கையை நிறைவேற்றிய விக்னேஷ் சிவனுக்கு நயன் ரசிகர்கள் நன்றிகளை தெரிவித்து வருகின்றார்கள்.

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வருகின்றார் நயன்தாரா. இவர் நானும் ரவுடிதான் திரைப்படத்தில் விக்னேஷ் சிவனுடன் இணைந்து பணியாற்றும் பொழுது இருவருக்குள்ளும் காதல் வளர்ந்தது. இவர்கள் தற்பொழுது லிவ்விங் டுகெதர் முறையில் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் இருவரும் இணைந்து பணியாற்றிய காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் சென்ற மாதம் வெளியானது. மேலும் இவர்கள் இருவரும் வருகின்ற ஜூன் மாதம் 9 ஆம் தேதி திருப்பதியில் திருமணம் செய்து கொள்ளப்போகின்றார்கள்.

இந்த நிலையில் நயன்தாராவின் புகைப்படங்கள் சமீபத்தில் வெளியானது. அதில் அவர் உடல் மெலிந்து எலும்பும் தோலுமாக காணப்பட்டதால் ரசிகர்கள் நயனை இப்படி பார்க்க முடியவில்லை. அதனால் அவரை நன்றாக கவனித்து உடம்பை தேத்துங்கள் என விக்கியிடம் ரசிகர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதன் விளைவாக தற்போது நயன்தாரா உடம்பை கவனிக்க கேரளாவுக்கு ஆயுர்வேத சிகிச்சை பெறுவதற்காக செல்கின்றார். ஆகையால் ஆறு மாத காலம் நடிப்பிற்கு இடைவெளி விடுவதாக செய்தி வெளியாகி இருக்கிறது. இதையறிந்த ரசிகர்கள் விக்னேஷ் சிவனுக்கு தங்களின் நன்றியை தெரிவித்து வருகின்றார்கள்.

Categories

Tech |