Categories
உலக செய்திகள்

நடுவானில் மயங்கிய விமானி…. வாழ்வா? சாவா? நிலையில்…. விமானத்தை இயக்கிய பயணி….!!!

அமெரிக்காவில் விமானம் நடுவானத்தில் சென்றுகொண்டிருந்தபோது விமானி மயங்கி விழுந்ததால் பயணி ஒருவர் பாதுகாப்பாக விமானத்தை தரையிறக்கிய சம்பவம் குறித்து விளக்கியிருக்கிறார்.

அமெரிக்க நாட்டின் ப்ளோரிடா மாகாணத்தில் பறந்துகொண்டிருந்த விமானத்தில் விமானிகள் இருவர் மற்றும் இரண்டு பயணிகள் இருந்திருக்கிறார்கள். விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த சமயத்தில், விமானி தனக்கு உடல் நலம் சரியில்லை என்று தெரிவித்திருக்கிறார். எனவே பயணிகள் இருவரும் அதிர்ந்து போனார்கள்.

உடனே அதில் டேரன் ஹாரிசன் என்ற பயணி ஓடிவந்து இப்போது என்ன செய்ய வேண்டும்? என்று விமானியிடம் கேட்டிருக்கிறார். ஆனால் விமானி அதற்குள் மயங்கி விழுந்து விட்டார். இது குறித்து டேரன் ஹாரிசன் தெரிவித்ததாவது, உடனடியாக விமானத்தை கட்டுப்படுத்தவில்லை எனில் விபத்து நேரிடும் என்று எனக்கு தெரிந்தது.

எனவே, உடனே விமானியின் இருக்கையில் அமர்ந்துவிட்டேன். அவரின் ஹெட்செட் வேலை செய்யாமல் இருந்தது, மேலும் அதிர்ச்சியை தந்தது. எனவே, துணை விமானியின் ஹெட்செட்டை எடுத்து அணிந்து கொண்டேன். அதன் பிறகு விமானத்தின் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டேன்.

அவர்கள் வழிகாட்டியவாறு பாதுகாப்பாக விமானத்தை தரையிறக்க முயற்சித்தேன். விமானமும் சரியாக தரையிறங்கி விட்டது. அந்த நிலையில் நான் பதற்றம் அடையவில்லை. ஏனெனில், அது வாழ்வா? சாவா? நிலையிலிருந்தது. பொது அறிவுடன் செயல்பட்டதால் விமானம் பாதுகாப்பாக தரை இறங்கி விட்டது என்று தெரிவித்துள்ளார்.

மேலும் கர்ப்பமாக இருக்கும் தன் மனைவியை பார்ப்பதற்காக அவர் சென்றதால், ஏதாவது செய்து மனைவியை பார்த்து விடவேண்டும் என்று எண்ணியதாக கூறியுள்ளார்.

Categories

Tech |