கமல்ஹாசன் புகழ்பெற்ற இந்தியத் திரைப்பட நடிகர் ஆவார். இவர் நடிகராக மட்டுமல்லாது திரைக்கதையாசிரியர், இயக்குநர், பாடலாசிரியர், பின்னணிப்பாடகர், நடன அமைப்பாளர் எனப் பன்முகத்தன்மை கொண்டவராக விளங்குகின்றார். கமல்ஹாசன், தமிழ் தவிர இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், வங்காளம் ஆகிய மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். ராஜ்கமல் பிலிம்ஸ் என்ற திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகின்றார். தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமலஹாசன் நடிப்பில் ‘விக்ரம்’ என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், அர்ஜுன் தாஸ், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை கமல்ஹாசன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்து கிரீஸ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்நிலையில் நேற்று ‘விக்ரம்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில் இயக்குனர் பா.ரஞ்சித், பார்த்திபன், கமல்ஹாசன், விஜய் சேதுபதி, உதயநிதி ஸ்டாலின், சிலம்பரசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அப்போது சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட பா ரஞ்சித் பேசியது, கமலஹாசன் சாருடன் சேர்ந்து விரைவில் பணியாற்றுவதற்காக மிகவும் ஆர்வத்தோடு உள்ளேன். அதனைத் தொடர்ந்து அவரை வைத்து ஒரு மதுரைபடம் பண்ணவே ஆசைப்படுகிறேன். அவர் நடித்த விருமாண்டி படம் எனக்கு மிகவும் பிடித்த படம். ஆனால் இதில் கமல் வேஷ்டி சட்டையுடன் வரமாட்டார் என்று அவர் கூறினார். மேலும் இவரின் இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.