மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த தொழிலாளிக்கு 10 வருடங்கள் ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
கடலூர் மாவட்டத்திலுள்ள வாண்டராசன்குப்பம் பகுதியில் கூலி தொழிலாளியான சக்திவேல்(50) என்பவர் வசித்து வருகிறார். கடலை 2020-ஆம் ஆண்டு அதே பகுதியில் வசிக்கும் மனநலம் பாதிக்கப்பட்ட 7 வயது சிறுமியை சக்திவேல் அப்பகுதியில் இருக்கும் ஓடைக்கு தூக்கி சென்று பாலியல் தொந்தரவுக்கு அளித்துள்ளார். இது குறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சக்திவேலை கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் சக்திவேலுக்கு 4 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்ததோடு, 10 வருடங்கள் ஜெயில் தண்டனை விதித்து அதிரடியாக உத்தரவிட்டது. மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 30 நாட்களுக்குள் சமூக பாதுகாப்பு துறையின் சமூக நல நிதியில் இருந்து 2 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.