அரசு மருத்துவமனை வளாகத்தில் மூலிகை தோட்டம் அமைக்கப்பட்டது.
தென்காசி மாவட்டத்திலுள்ள 13-ஆவது வார்டு நகராட்சி நடுநிலைப்பள்ளி மற்றும் கரிசல்குடியிருப்பு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆகியவற்றின் சுற்றுச்சூழல் மன்றம் சார்பாக அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் மூலிகைத்தோட்டம் அமைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் ஜெஸ்லின் என்பவர் தலைமை தாங்கியுள்ளார். மேலும் டாக்டர் ஜெஸ்லின் முதல் மூலிகைச் செடியை நட்டு வைத்தார்.
இந்நிலையில் தென்காசி 13-வது வார்டு நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் கற்பகம், சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் வின்சென்ட், கரிசல் குடியிருப்பு பள்ளி சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் பாபு ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். மேலும் பசுமை தென்காசி அமைப்பைச் சேர்ந்த முஸ்தபா, பசுமை இலத்தூர் அமைப்பை சேர்ந்த உதயகுமார், கவியரசு, கனகராஜ், சதீஷ்குமார் ஆகியோர் மூலிகை தோட்டம் அமைக்கும் பணியை சிறப்பாக செய்து முடித்தனர்.