ரஷ்யாவில் உள்ள ரெனால்ட் நிறுவனத்தின் சொத்துக்களை ரஷ்யா வாங்கியுள்ளதை ரெனால்ட் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படை எடுப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ரஷியா மீது மேற்கத்திய நாடுகள் பொருளாதார தடைகளை விதித்துள்ளன. ரஷ்யாவில் இயங்கி வந்த கார் தயாரிப்பு நிறுவனங்களும் தங்களது உற்பத்தியை நிறுத்தி இருக்கின்றது. அந்த வகையில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான ரெனால்டு ரஷ்யாவை விட்டு வெளியேறி இருக்கிறது.
இதனையடுத்து ரஷ்யாவில் உள்ள ரெனால்ட் நிறுவனங்களின் சொத்துக்களை ரஷ்யா வாங்கி இருக்கின்றது. மேலும் ரெனால்ட் நிறுவனமும் இந்த தகவலை உறுதிப்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் ஐரோப்பாவுக்கு அடுத்தபடியாக நிறுவனத்தின் மிகப்பெரிய சந்தையாக ரஷ்யா விளங்கி வருகின்றது.