Categories
மாநில செய்திகள்

தமிழக குடும்ப அட்டைதாரர்களே!…. இதை உடனே பண்ணுங்க…. அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

வறுமைக்கோட்டிற்கு கீழுள்ள மக்களின் முக்கியமான வாழ்வாதாரமாக அரசின் ரேஷன் அட்டைகள் உள்ளது. இதன் வாயிலாக அரசின் பல நலத்திட்டங்களும், மலிவு விலையில் அரிசி, கோதுமை, பருப்பு, எண்ணெய் ஆகிய உணவுப் பொருட்களும் வழங்கப்படுகின்றன. அதுமட்டுமல்லாமல் கொரோனா பேரிடர் காலத்தில் அரசின் சில நிதி உதவிகளும் ரேஷன் அட்டைகள் வாயிலாகவே மக்களிடம் கொடுக்கப்படுகின்றன. ஆகவே அரசிற்கும், மக்களுக்கும் இடையில் ஒரு பாலமாக ரேஷன் அட்டைகள் உள்ளது. இந்த நிலையில் இப்போது ரேஷன் அட்டைகள் ஆதாருடன் இணைக்கப்பட்டு ஒரேநாடு ஒரே ரேஷன் திட்டம் நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் மக்கள் எந்த இடத்தில் இருந்தும் ரேஷன் பொருள்களை வாங்கிக்கொள்ளலாம்.

எனவே மக்களுக்கு இது ஒரு நல்ல சலுகையாக இருக்கிறது. உங்களுக்கு திருமணம் முடிந்து இருந்தால் ரேஷன் அட்டைகளில் சில முக்கியமான அப்டேட் செய்யவேண்டியது அவசியமாகும். அதாவது உங்களது குடும்பத்தில் புதிதாக ஒரு உறுப்பினர் சேர்ந்தால் நீங்கள் அதனை பதிவுசெய்ய வேண்டும். இல்லையெனில் குறிப்பிட்ட சில சலுகைகள் கிடைக்காமல் போய் விடும். ரேஷன் பொருட்கள் மற்றும் அரசின் நலத்திட்ட உதவிகள் கிடைக்காமல்கூட போக வாய்ப்பு இருக்கிறது. இந்த அப்டேட் செய்ய முதலாவதாக உங்களுக்கு திருமணம் முடிந்தது பற்றி ஆதார் அட்டையில் அப்டேட் செய்ய வேண்டும்.

இதை அப்டேட் செய்த பின் திருத்தப்பட்ட ஆதார் அட்டை நகலுடன், ரேஷன் அட்டையில் பெயர் சேர்க்க உணவுத்துறை அலுவலரிடம் விண்ணப்பிக்க வேண்டும் அல்லது ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க மாநில உணவு வழங்கல் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்துக்குச் செல்ல வேண்டும். மேலும் உங்கள் மாநிலத்தில் ஆன்லைனில் உறுப்பினர்களின் பெயர்களைச் சேர்க்கும் வசதி இருப்பின், வீட்டில் இருந்தபடியே அப்டேட் செய்யலாம். அத்துடன் உங்களது குழந்தை பெயரை சேர்க்க வேண்டுமெனில் அதற்கு குழந்தைக்கு முதலில் ஆதார் எடுக்க வேண்டும். அப்போது இதற்கு குழந்தையின் பிறப்புச்சான்றிதழ் தேவைப்படும். அதன்பின் ஆன்லைனில் ஈஸியாக பதிவு செய்யலாம்.

Categories

Tech |