Categories
தேசிய செய்திகள்

என்ன ஒரு கொடுமை?…. சாலையில் கட்டிப்புரண்டு மோதிக்கொண்ட கல்லூரி மாணவிகள்…. பரபரப்பை கிளப்பும் வீடியோ….!!!

புதுச்சேரி பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரி மாணவிகள் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டு கல்லூரி வாயில் முன்பு சாலையில் கட்டிப்புரண்டு மோதிக்கொள்ளும் வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. புதுச்சேரியில் முத்தியால்பேட்டையில் பாரதிதாசன் அரசினர் மகளிர் கல்லூரி ஒன்று உள்ளது. அந்தக் கல்லூரியில் ஒரு துறை சார்பாக farewell நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் பல்வேறு துறைகளை சார்ந்த மாணவிகள் கலந்து கொண்டனர். அப்போது திடீரென மாணவிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதல் ஏற்பட்டது.

அப்போது எங்களது துறை நிகழ்ச்சிக்கு நீங்கள் எப்படி வரலாம் என்று மாணவிகள் சண்டை போட்டுக் கொண்டனர். பிறகு கல்லூரிக்கு வெளியே சென்று கல்லூரி வாயில் முன்பு கீழே விழுந்து மாணவிகள் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக் கொண்டனர். அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. இது தொடர்பாக மாணவிகளிடம் கல்லூரி நிர்வாகம் விசாரணை நடத்தி வருகின்றது. சமீபகாலமாக கல்லூரி மாணவர்கள் அடிக்கடி சண்டை போட்டு வரும் நிலையில் புதுச்சேரியில் கல்லூரி மாணவிகள் கல்லூரிக்கு வெளியே கட்டிப்புரண்டு சண்டை போடும் நிகழ்வு பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

Categories

Tech |