துணிப்பை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு பாடல் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
தேனி மாவட்டத்திலுள்ள தன்னார்வலர்கள் குழுவினர் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் பல பணிகளை செய்து கொண்டும் விழிப்புணர்வை ஏற்படுத்தியும் வருகின்றனர். இந்நிலையில் இவர்கள் துணிப்பை பயன்படுத்துவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பாடல் ஒன்றை உருவாக்கியுள்ளனர்.
இந்த விழிப்புணர்வு பாடல் வெளியீடும் நிகழ்ச்சியானது நன்செய் தன்னார்வ அமைப்பின் நிறுவனர் செந்தில் குமார் தலைமையில் பழனிசெட்டிபட்டியில் உள்ள முல்லைப் பெரியாற்றின் கரையோரம் இருக்கும் பனை மரக்காட்டில் நடைபெற்றது. இந்த பாடலை பனையேறும் தொழிலாளியான கருப்பையா வெளியிட்டார். இந்தப்பாடலானது அண்மையில் வெளியான ‘ஊ சொல்றியா’ பாடல் பாணியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வரிகளுடன் உருவாக்கப்பட்டு வெளியாகிய நிலையில் இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.