Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார்”…. கடத்திச் செல்லப்பட்ட 6 டன் ரேஷன் அரிசி…. 2 பேர் கைது…!!!!

காட்பாடி அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட பொழுது 6 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடி முத்தரசி குப்பம் சோதனை சாவடி அருகே குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை இன்ஸ்பெக்டர் சதீஷ் தலைமையிலான சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்த பொழுது சித்தூரை நோக்கி ஒரு லாரி வேகமாக வந்தது.

அதனால் போலீசார் அதை நிறுத்தி வாகன சோதனை செய்தபோது அதில் 120 மூட்டைகளில் 6 டன் ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. இந்த ரேஷன் அரிசியை கடத்தி வந்த பெருமாள் சந்தோஷ் குமார் உள்ளிட்டோரை போலீஸார் கைது செய்து ரேஷன் அரிசி, லாரி உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தார்கள். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.

Categories

Tech |