மே இருபத்தி ஆறாம் தேதி முதல் பான் கார்டு மற்றும் ஆதார் கார்டு இருந்தால்தான் பணம் அனுப்ப முடியும் என்ற புதிய விதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இன்றைய சூழ்நிலையில் மக்கள் வங்கிக்கு சென்று காத்திருப்பது, லைனில் நின்று சிரமப்படுவது போன்ற எதுவும் இல்லாமல் இருந்த இடத்திலிருந்தே ஸ்மார்ட் போன் மூலமாக பணத்தை அனுப்பி வைத்து விடுகின்றன. இதில் பல சலுகைகளும் கிடைக்கின்றது. இதனால் நிதி மோசடிகள் அதிகரித்தால் வருமான வரித்துறை அதிரடி நடவடிக்கை இறங்கியுள்ளது. பெரிய அளவிலான பண பரிவர்த்தனைகளை கண்காணிக்கவும், அவற்றை நெறிமுறை படுத்துவதற்கும் புதிய விதி அமலுக்கு வந்துள்ளது.
அதன்படி 20 லட்சம் ரூபாய்க்கு மேல் பண பரிவர்த்தனை செய்பவர்களுக்கு நிபந்தனை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு நிதி ஆண்டில் அதிகபட்சமாக 20 லட்சத்துக்கும் மேல் யாரும் வித்டிரா செய்ய முடியாது. அவ்வாறு செய்தால் அவர்கள் பான் கார்டு மற்றும் ஆதார் கார்டு விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும். இந்த விதி மே 26-ஆம் தேதி முதல் அமலாகிறது. அதைத்தாண்டி ஒரு நிதி ஆண்டில் 20 லட்சம் ரூபாய்க்கு மேல் பண பரிவர்த்தனை செய்தால் அவர்களின் விவரங்கள் சேகரிக்கப்படும் எனவும், இந்த உத்தரவை மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் தற்போது நிதி மோசடிகள் அதிகரித்து வருகிறது. பெரிய அளவில் பண பரிவர்த்தனைகள் செய்துவிட்டு வருமான வரித்துறையின் பிடியில் சிக்காமல் தப்பித்து வருகின்றனர். இதனால் வாடிக்கையாளர் விவரங்களை வருமான வரித் துறையினர் கட்டாயமாக்கி உள்ளனர்.