ராஜ்யசபா தேர்தல் அடுத்த மாதம் பத்தாம் தேதி நடைபெற உள்ள நிலையில் திமுக சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களை நேற்று திமுக தலைமை அறிவித்தது. பகுத்தறிவு பேசும் திமுக ராஜ்யசபா தேர்தலுக்கான வேட்பாளர்களை பௌர்ணமி நாள் பார்த்து அறிவித்துள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், திமுக ஆட்சிக்கு வந்தால் தேனும் பாலும் தமிழகத்தில் ஓடும் என வாக்குறுதிகளை அள்ளி வீசியது. நீட் தேர்வு இருக்காது, மாதம் ஒருமுறை மின்சார கணக்கு எடுக்கப்படும்,மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை அளித்தது.
கொடுத்த வாக்குறுதியில் எதையாவது ஒன்றை திமுக ஆட்சி நிறைவேற்றியுள்ளதா? என்று கேள்வி எழுப்பினார்.திமுக ஆட்சி மீது மக்கள் கடும் கோபத்தில் இருப்பதாகவும் நாடாளுமன்ற தேர்தலின் போது மக்களின் கோபம் வெளிப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் பகுத்தறிவு பேசும் திமுக பௌர்ணமி தினத்தில் வேட்பாளர் பெயரை அறிவித்துள்ளதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.