பிரேசில் நாட்டில் Chiquino scarpa என்ற தொழிலதிபர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2013-ம் ஆண்டு தன்னுடைய முகநூல் பக்கத்தில் ஒரு தகவலை வெளியிட்டார். அதில் எகிப்து நாட்டைச் சேர்ந்தவர்கள் தாங்கள் இறப்பதற்கு முன்பாக தங்களுக்கு பிடித்த பொருட்களை மண்ணில் புதைத்து வைத்து விடுவார்கள். அப்படி புதைப்பதால் அவர்கள் மறுஜென்மம் எடுக்கும் போது அவர்களுக்கு பிடித்த பொருள் மீண்டும் கிடைக்கும் என நம்புகின்றனர்.
அதேபோன்று எனக்கு பிடித்த 5 லட்சம் டாலர் மதிப்புள்ள காரையும் மண்ணில் புதைக்கப் போகிறேன் என பதிவிட்டிருந்தார். இந்த பதிவை பார்த்த பலரும் அவரை கடுமையாக விமர்சித்துள்ளனர். இது குறித்து ஒரு பேட்டியில் Chiquino scarpa விடம் கேட்ட போது நான் அந்த காரை கட்டாயமாக மண்ணில் புதைப்பேன் என கூறினார். நான் அந்த காரை புதைக்கும் போது என்னுடைய வீட்டிற்கு வந்து அதை புகைப்படம் எடுத்து கொள்ளுங்கள் என கோபமாக கூறிவிட்டு அங்கிருந்து சென்று விட்டார்.
இந்நிலையில் அவர் காரை புதைக்கும் போது அவருடைய வீட்டிற்கு முன்பாக ஒரு பெரிய கூட்டமே நின்றுள்ளது. மேலும் ஒரு பெரிய குழியை தோண்டி அதில் காரை புதைக்கும் நேரத்தில் அவர் நிறுத்துமாறு கூறியுள்ளார். அதன் பிறகு Chiquino scarpa நான் காரை புதைக்கப் போகிறேன் என்று கூறியபோது அனைவரும் அதை முட்டாள்தனம் என கூறினீர்கள். ஆனால் அதை விட பெரிய முட்டாள்தனத்தை நீங்கள் செய்கிறீர்கள் என்றார். அதாவது உலகில் நிறைய பேர் உடல்நலக் குறைவாலும், விபத்துகளாலும் உயிரிழக்கின்றனர்.
இவர்களில் நிறைய பேர் உடல் உறுப்புகள் கிடைக்காமல்இறக்கின்றனர். ஆனால் இறந்த பிறகு உடல் உறுப்புகளை தானம் செய்யாமல் அந்த உடம்பை வீணாக மண்ணில் புதைக்கின்றனர். அந்த உடம்பை மண்ணில் புதைப்பதற்கு முன்பாக உடல் உறுப்புகள் தானம் செய்தால் நாம் இறந்தால் கூட நம்முடைய உடல் உறுப்புகள் மூலம் மற்றவரை வாழ வைக்க முடியும் என்றார். அதன்பிறகு அவரை திட்டிய அனைவரும் பாராட்ட ஆரம்பித்துள்ளனர். மேலும் அந்த நாட்டில் Chiquino scarpa ஆல் உடல் உறுப்புகள் தானம் 31 சதவீதம் அதிகரித்தது.