Categories
தேசிய செய்திகள்

பெரும் சோகம்…. கிரிக்கெட் உலகிற்கு மிகப்பெரிய இழப்பு…. மணல் சிற்பம் மூலம் அஞ்சலி….!!!!!

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஆண்ட்ரூஸ் சைமண்ட்ஸ் மறைவு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஆண்ட்ரூஸ் சைமண்ட்ஸ் நேற்று இரவு ஏற்பட்ட கார் விபத்தில் உயிரிழந்துவிட்டதாக குயின்ஸ்லாந்து காவல்துறையினர் உறுதி செய்துள்ளனர். ஆண்ட்ரூ சைமண்ட்சின் மறைவிற்கு கிரிக்கெட் வீரர்கள் உள்பட பலர் தங்களின் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் ஒடிசாவின் மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் ஒரிசாவின் பூரி கடற்கரையில் ஆன்ட்ரூ சைமண்ட்சின் உருவத்தை மணல் சிற்பத்தில் உருவாக்கி அவரின் மறைவிற்கு அஞ்சலி செலுத்தியிருக்கிறார்.

மேலும் அந்த சிற்பத்தின் புகைப்படத்தை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள்ளார். அதில் சுதர்சன் பட்நாயக் ஆன்ட்ரூ சைமன்ஸ் விபத்தில் காலமானதை அறிந்து மிகவும் வேதனை அடைகிறேன். மேலும் இது கிரிக்கெட் உலகிற்கு மிகப்பெரிய இழப்பு என தெரிவித்துள்ளார்.

Categories

Tech |