Categories
மாநில செய்திகள்

‘தனியார் பயிற்சி மையங்கள் கொள்ளையடிக்கவே நீட் தேர்வு’….. ஆளுநர் முன்பு அமைச்சர் பொன்முடி அதிரடி….!!!!

தனியார் பயிற்சி மையங்கள் கொள்ளையடிப்பதற்காக வே நீட் போன்ற நுழைவுத் தேர்வுகள் நடத்தப்படுவதாக ஆளுநர் முன்பாக அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

சென்னைப் பல்கலைக்கழகத்தின் 164வது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் தொடங்கியது. பல்கலைக்கழக வேந்தரான ஆளுநர் ரவி தலைமையில் நடைபெற்ற விழாவில் சிறப்பு விருந்தினராக முதல்வர் முக ஸ்டாலின், அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டனர். இந்நிலையில் இந்த பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் பொன்முடி பேசும்போது “இந்தியாவின் தலை சிறந்த முதல்வராக மு.க.ஸ்டாலின் உள்ளார்.

கல்வியும் சுகாதாரமும் இரு கண்கள் என்று உறுதியாக இருப்பவர் முதல்வர். நீட் மசோதாவை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்த ஆளுநருக்கு நன்றி. கல்வி மாநில உரிமை இருக்க வேண்டும் என்பதை கவர்னரிடம் கோரிக்கையாக வைக்கின்றேன். பயிற்சி மையங்கள் கொள்ளையடிப்பதற்கு வசதியாக நீட் தேர்வு உள்ளது. மேலும் நீட் போன்ற நுழைவு தேர்வுகள் மாணவர்களுக்கு பயனளிக்காது. பிளஸ் டூ மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை தேவை என்று கவர்னரிடம் கோரிக்கை விடுக்கிறோம்” என்று அவர் தெரிவித்தார்.

Categories

Tech |