Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

திருமணமான 2 மாதத்தில்…. புதுப்பெண் எடுத்த விபரீத முடிவு…. பெரும் சோகம்…!!

புதுப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தென்காசி மாவட்டத்திலுள்ள சீவல சமுத்திரம் நடுத்தெருவில் பிரவீன் குமார் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பிரவீன் குமாருக்கு உறவினரான மோனிஷா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்ட மோனிஷா மன உளைச்சலில் விஷம் குடித்து மயங்கிவிட்டார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மோனிஷாவை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி மோனிஷா பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |