Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“நெல்லை அருகே பஸ் டிரைவரை வெட்டிய பஸ் கண்டக்டர்”…. போலீசார் கைது செய்து விசாரணை…!!!!

நெல்லை அருகே பஸ் டிரைவரை மற்றொரு பஸ் கண்டக்டர் அரிவாளால் வெட்டியதால் போலீசார் அவரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றார்கள்.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தாழையூத்தை சேர்ந்த சுபாஷ் என்பவர் தனியார் பஸ்சில் கண்டக்டராக பணியாற்றி வருகின்றார். பாளையங்கோட்டையை சேர்ந்த சங்கரபாண்டி தனியார் பஸ்ஸில் டிரைவராக பணியாற்ற அதே பஸ்ஸில் இசக்கிபாண்டி கண்டக்டராக பணியாற்றி வருகின்றார். இசக்கிபாண்டிக்கும் சுபாசுக்கும் பேருந்துகளில் பயணிகளை ஏற்றிச் செல்வதில் ஏற்கனவே சண்டை ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பாக இசக்கிபாண்டி, சங்கரபாண்டி ஆகியோர் இயக்கிய பேருந்தை சுபாஷ் முந்திச் சென்று வண்ணாரப்பேட்டை பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டது.

இதனால் சங்கரபாண்டியும் இசக்கிபாண்டியும் சுபாஷை கண்டித்தார்கள். இதனால் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட அக்கம்பக்கத்தினர் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தார்கள். இதையடுத்து சுபாஷ் இயக்கும் பஸ்ஸின் உரிமையாளர் வசூல் குறைவாக இருக்கிறது என திட்டியதாக சொல்லப்படுகின்ற நிலையில் சுபாஷ் சங்கரபாண்டி மற்றும் இசக்கி பாண்டி மீது கோபத்தில் இருந்துள்ளார். இதனால் இசக்கிபாண்டியன், சங்கரபாண்டியன் பணி முடிந்தவுடன் பேருந்து நிறுத்தத்திற்கு வந்தபொழுது சுபாஷ் கையில் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சங்கரபாண்டியன் தலையில் வெட்ட ஓங்கிய பொழுது இதை அறிந்த சங்கரபாண்டி அவரைத் தடுக்க லேசான வெட்டு மட்டும் விழுந்தது.

இதனால் காயம் அடைந்த சங்கரபாண்டியனை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தார்கள். இதையடுத்து சுபாஷ் அங்கிருந்த பஸ்சில் ஏற அவர் கையில் அரிவாள் வைத்திருந்ததால் கண்டக்டர் அவரை நடுரோட்டில் இறங்கி விட்டதால் சாலையில் சென்று கொண்டிருந்த ஆட்டோவில் ஏறி தொங்கியபடி சென்ற சுபாஷை ஏட்டு அருணாச்சலம் ஆட்டோவை விரட்டி சென்று சுபாஷை கைது செய்தார். இதையடுத்து பாளையங்கோட்டை சப் இன்ஸ்பெக்டர் சிவக்குமாரிடம் சுபாஷை ஒப்படைத்தார்கள். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Categories

Tech |