ஆப்பிரிக்காவில் கடந்த 1998-ம் வருடம் ஒரு கால்பந்து விளையாட்டு போட்டி நடைபெற்றுள்ளது. இந்த போட்டியில் 2 அணிகள் கலந்து கொண்டது. இதில் ஒரு அணியினர் சிவப்பு நிறத்திலான உடையும், மற்றொரு அணியினர் கருப்பு நிறத்திலான உடையும் அணிந்து இருந்தனர். ஒவ்வொரு அணியிலும் 11 பேர் இருந்துள்ளனர். இந்த கால்பந்து போட்டி நடந்து கொண்டிருந்தபோது திடீரென இடி விழுந்துள்ளது. இந்த இடி விழுந்ததால் 11 பேர் உயிரிழந்தனர். இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் 2 அணியினர் விளையாடிக் கொண்டிருந்த இடத்தில் சிவப்பு நிறத்திலான ஆடை அணிந்த அணியினர் 11 பேர் மட்டும்தான் உயிரிழந்தனர்.
ஆனால் கருப்பு நிறத்திலான ஆடையணிந்த அணியினருக்கு ஒரு சிறிய காயம் கூட ஏற்படவில்லை. இதற்கான காரணம் என்னவென்று யாருக்குமே தெரியவில்லை. இருப்பினும் ஒரு சிலர் சிவப்பு நிறத்திலான ஆடையணிந்த அணியினர் சாபம் பெற்றதால் உயிரிழந்திருக்கலாம் என கூறினர். இருப்பினும் சிலர் சிவப்பு நிறத்திலான ஆடையணிந்த அணியினர் மெட்டலால் செய்யப்பட்ட அணிகலன்களை அணிந்து இருந்ததால் தான் இடிதாக்கி உயிரிழந்ததாகவும் கருதினர். மேலும் இதற்கான உண்மை காரணம் இதுவரை தெரியவில்லை.