திருச்சி மாவட்டத்தில் உள்ள தில்லை நகரில் இருக்கும் காபிக்கடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள தில்லைநகர் கே.டி ஜங்ஷனில் சாலையோரமாக இருக்கும் ஐயங்கரன் பேக்கரி மற்றும் காபி கடை இருக்கின்ற நிலையில் நேற்று மாலை சிலிண்டரில் இருந்து கேஸ் கசிந்ததால் தீப்பிடித்தது.
முன்பக்கத்தில் பிடித்த தீ வேகமாக கடை முழுவதும் பரவி பற்றி எரிந்தது. இதையடுத்து உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தார்கள். ஆனால் கடையில் இருந்த அனைத்து பொருட்களும் தீக்கு இரையானது. இதனால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் போலீசார் இது குறித்து விசாரணை செய்து வருகின்றார்கள்.