ஆக்ராவில் அமைந்துள்ள தாஜ்மஹால் உலக அதிசயங்களில் ஒன்றாக இருக்கிறது. இந்த தாஜ்மஹால் முழுவதுமாக பளிங்கு கற்களால் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டிடத்தை ஷாஜகான் தன்னுடைய மனைவி மும்தாஜ் நினைவாக கட்டியுள்ளார். இந்த தாஜ்மஹால் கட்டுவதற்கான பணிகள் கடந்த 1632-ம் ஆண்டு தொடங்கப்பட்டு 1653-ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்த தாஜ்மஹால் 22,000 பணியாட்களை கொண்டு கட்டப்பட்டுள்ளது. இந்த தாஜ்மஹால் காதலின் சின்னமாக இருக்கிறது. இந்நிலையில் தாஜ்மஹால் எப்போதும் நிறம் குறையாமல் வெள்ளை நிறத்தில் காட்சி அளிக்கிறது.
இதற்கு காரணம் தாஜ்மஹாலின் நிறம் குறையும் போதோ அல்லது ஸ்கிராட்செஸ் ஏற்பட்டாலோ Lime Rich வைத்து பூசிவிடுவார்கள். அதன்பிறகு தாஜ்மஹாலின் மீது தண்ணீர் ஊற்றி விடுவார்கள். சுருக்கமாக சொன்னால் முகத்திற்கு பேசியல் செய்வது போல் தாஜ்மஹாலுக்கு பேசியல் செய்து விடுவார்கள். மேலும் Lime Rich பூசுவதால் தான் தாஜ் மஹால் வெள்ளை நிறத்தில் காட்சி அளிக்கிறது. இந்த Lime Rich பூசுவதை கடந்த 2018-ம் ஆண்டு இந்தியன் ஆர்க்கியாலஜி தான் கண்டு பிடித்துள்ளது.