அமெரிக்காவைச் சேர்ந்த ராபர்ட் என்பவர் தினமும் காலை 3 மணிக்கு எழுந்து 170 கிலோமீட்டர் பயணித்து ஒரு பள்ளியில் துப்புரவு பணியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் 4 மணிக்கு பள்ளி முடிந்தவுடன் 170 கிலோமீட்டர் பயணித்து மீண்டும் வீட்டிற்கு வருவார். இதேபோல ராபர்ட் 4 வருடங்கள் தொடர்ந்து பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் ராபர்ட் மனைவி மற்றும் குழந்தைகள் இல்லாமல் சிரமப்படுகிறார் என்பதை அறிந்த ஆசிரியர் ஒருவர் பள்ளி நிர்வாகத்தின் சார்பாக 10 டாலர் சேசேகரித்தார். இதனை அடுத்து ராபர்ட்டை பள்ளியில் இருக்கும் நூலகத்திற்கு வரவழைத்து அந்த 10 ஆயிரம் டாலரை அவரிடம் கொடுத்துள்ளனர்.
இதனை பார்த்து இன்ப அதிர்ச்சியில் ராபர்ட் கதறி அழுகிறார். இதனை அடுத்து ராபர்ட் பள்ளிக்கு அருகிலேயே ஒரு வீடு மற்றும் காரை வாங்கி தினமும் அந்த காரில் தான் பள்ளிக்கு வருவார் என அனைவரும் நினைத்தனர். ஆனால் வழக்கம்போல ராபர்ட் 170 கிலோமீட்டர் பயணித்து பள்ளிக்கு வந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள் 10 ஆயிரம் டாலரை என்ன செய்தீர்கள் என கேட்டனர். அதற்கு என்னை விட மிகவும் வாழ்க்கையில் கஷ்டப்படும் சிலருக்கு அந்த பணத்தை பிரித்து கொடுத்தேன் என அவர் தெரிவித்தார்.