தமிழகத்திற்கு வெளிமாநிலங்களில் இருந்து காய்கறிகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அதைப் பொறுத்து விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்நிலையில் தமிழகத்திற்கு வெளிமாநிலங்களில் இருந்து வரக்கூடிய காய்கறிகளின் வரத்து குறைந்துள்ளதால் சென்னையில் காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக ஒரு கிலோ தக்காளி 70 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெளிமார்க்கெட்டில் 90 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.ஒரு கிலோ 95 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மற்ற காய்கறிகள் கிலோவுக்கு 10 ரூபாய் வரை கூடுதலாக விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை உயர்வு இன்னும் இரண்டு நாட்களுக்கு நீடிக்கும் என கூறுகின்றனர். இதை பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.