துணிக்கடையில் பற்றி எரிந்த தீயை தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராடி அனைத்துள்ளனர்.
சென்னை மாவட்டத்தில் உள்ள கவுரிவாக்கம் பகுதியில் பஞ்சாபில் இருந்து கைத்தறித் துணிகள், கைவினை பொருட்கள், பஞ்சு மெத்தைகள், படுக்கைகள் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்களை கொண்டு வந்து விற்பனை செய்யும் துணி கடை ஒன்று அமைந்துள்ளது. இந்நிலையில் நேற்று இந்த கடை தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் பற்றி எரிந்த தீயை அணைக்க முயன்றனர். ஆனால் தீ மளமளவென அருகில் உள்ள கடைகளுக்கு பரவியதால் நீண்ட நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் பற்றி எரிந்த தீயை அனைத்தனர். இந்த விபத்தில் பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளது. மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.