நியூசிலாந்து நாட்டின் பிரதமரான ஜெசிந்தா ஆர்டெனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நியூசிலாந்து நாட்டின் பிரதமரான ஜெசிந்தா ஆர்டெர்னுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்த தகவலை, பிரதமர் அலுவலகம் உறுதி செய்திருக்கிறது. பிரதமருக்கு கொரோனா தொற்றிற்கான அறிகுறிகள் லேசாக இருந்திருக்கிறது. எனவே, அவர் ஒரு வாரம் தன்னை வீட்டில் தனிமைப்படுத்தி கொள்வார் என்று அரசாங்கம் அறிக்கை வெளியிட்டிருகிறது.
பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன், கொரோனா பரவத்தொடங்கிய போது, முதல் அலையில் நாட்டை சிறப்பாக வழிநடத்தி, கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மக்களை மீட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.