ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலை படி உயர்த்துவது குறித்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் மத்திய அரசு ஊழியர்களுக்கு வருடந்தோறும் அதிகரித்து வரும் விலைவாசிக்கு ஏற்ப அகவிலைப்படி உயர்த்தப்பட்டு வருகிறது. பணவீக்கம் உயர்ந்தாலும் ஊழியர்களின் வாழ்க்கை பாதிக்கப்படாமல் இருப்பதற்காக இந்த அகவிலைப்படி தொகை அவர்களுக்கு பயன்பெற்று வருகிறது. மேலும் இந்த அகவிலைப்படி அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டில் பரவிய கொரோனா பெருந்தொற்றில் விதிக்கப்பட்ட ஊரடங்கில் ஏற்பட்ட பொருளாதார சரிவின் காரணமாக அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் அகவிலைப்படி உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த காலகட்டத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வால் அகவிலைப்படியை மீண்டும் வழங்க வேண்டும். மேலும் அதனை உயர்த்த வேண்டும் எனவும் ஊழியர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதனைத்தொடர்ந்து அகவிலைப்படி இரண்டு கட்டங்களாக உயர்த்தி 31 சதவீதமாக வழங்கப்பட்டிருந்தது. அதன்பின் மேலும் 3 சதவீதம் உயர்த்தப்பட்டு கடந்த ஏப்ரல் மாதம் முதல் 34 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து பல ஊழியர்கள் பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறை மற்றும் நிலுவையிலுள்ள அகவிலைப்படியை வழங்குதல் போன்ற கோரிக்கைகளும் எழுந்து வருகின்றது.
இந்த நிலையில் அரசு ஓய்வூதியதாரர்களின் வருங்கால வைப்பு நிதி பயனாளிகளுக்கான அகவிலை நிவாரணத் தொகையை 13 சதவிகிதம் உயர்த்துவதாக மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் பயனாளிகள் A, B, C மற்றும் D குழுவிற்கு ரூ.3,000, ரூ.1,000, ரூ.750 மற்றும் ரூ.650 போன்ற கருணைத் தொகையை பெறுவதற்கு தகுதியானவர்கள் என்று அரசு அறிவித்துள்ளது. ஜனவரி 1, 2022 முதல், அடிப்படை தொகையில் 360 சதவீதத்திலிருந்து 373 சதவீத கருணைத் தொகை மற்றும் அகவிலைப்படி நிவாரணம் கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது.