Categories
உலக செய்திகள்

இரண்டாக உடைந்த நீர்ச்சறுக்கு… 30 மீட்டர் உயரத்தில் இருந்து விழுந்த குழந்தைகள்… வெளியான திடுக்கிடும் வீடியோ….!!!!

இந்தோனேசியாவிலுள்ள ஒரு பொழுதுபோக்கு பூங்காவில் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்த நீர்ச்சறுக்கு சரிந்து கீழே விழுந்ததைக் காட்டும் வீடியோவானது சமூகஊடகங்களில் வெளியாகி இருக்கிறது. அதாவது கிழக்கு ஜாவாவின் சுரபயா நகரிலுள்ள கெஞ்சரன் பூங்காவில் நீர் சறுக்கு உடைந்து விழுந்த கோர விபத்தில் 16 குழந்தைகள்  படுகாயமடைந்தனர்.

நீர் சறுக்கில் சறுகி விளையாட பயணிகள் காத்திருந்த சூழ்நிலையில் திடீரென்று அது உடைந்து 30 மீட்டர் உயரத்தில் இருந்து பயணிகள் கீழே விழுந்தனர். இந்த கோர விபத்தில் 16 குழந்தைகள்  படுகாயமடைந்தனர். இதனிடையில் 8 பேருக்கு மேல் எலும்பு முறிவு ஏற்பட்டது. பயணிகளுடைய பாரம் தாங்காமல் நீர் சறுக்கு உடைந்து இருக்கக்கூடும் என்று பூங்கா நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த விபத்தில் காயமடைந்தவர்களின் சிகிச்சைக்கான செலவை பொழுதுபோக்கு  பூங்கா நிர்வாகம் வழங்கும் என சுரபயா மேயர் எரி காயாடி தெரிவித்தார். தற்போது இந்த விபத்து தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது. அதனை தொடர்ந்து அதிகாரிகள் பொழுதுபோக்கு பூங்காவை மூடிவிட்டு, இச்சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளனர். மேலும் அப்பகுதியிலுள்ள மற்ற பூங்காக்களை உடனே ஆய்வு மேற்கொள்ள உத்தரவிட்டனர்.

Categories

Tech |