ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் கட்டாயமாக பெண்கள் பொது இடங்களில் பர்தா அணியவேண்டும் என்று அறிவித்ததை ஜி -7 நாடுகளின் தலைவர்கள் கடுமையாக எதிர்த்திருக்கிறார்கள்.
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதிலிருந்து பெண்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் பெண்கள் கட்டாயமாக பொது இடங்களில் தலையிலிருந்து கால் வரைக்கும் மூடக்கூடிய பர்தாவை அணிந்திருக்க வேண்டும் என்று சமீபத்தில் அறிவித்தார்கள்.
இந்த அறிவிப்பிற்கு ஜி-7 நாடுகள் கண்டனம் தெரிவித்திருக்கிறது. அதன்படி, ஜி-7 நாடுகளின் வெளியுறவுத்துறை மந்திரிகள் இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்கள். அதில் சமூகத்தில் சமமாக, அர்த்தமுடையதாக, முழுமையாக பங்கேற்கக்கூடிய மக்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதிப்பதை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம் என்று கூறியுள்ளனர்.