Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கொரோனாவால் சுதந்திரம் பறிபோன அவலம்

சீனாவில் இருந்து சென்னை வந்த 8 பேருக்கு கொரோன  பாதிப்பு சோதனை நடத்தப்பட்டு பாதிப்பு இல்லை என தெரிந்ததும் அவர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

கோவை மாவட்டத்தை சேர்ந்த 6 பேர், திண்டுக்கல் மற்றும் சென்னை சேர்ந்த இருவர் என எட்டு பேர் சீனாவில் இருந்து பெங்களூர் வந்து அங்கிருந்து சென்னை வந்தனர். அவர்களை தீவிரமாக பரிசோதித்து பாதிப்பு ஏதும் இல்லை என்று தெரிய வந்ததை அடுத்து சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இருப்பினும் பாதுகாப்பு கருதி அவர்கள் 28 நாட்களுக்கு வீட்டை விட்டு வெளியில் வரக்கூடாது, பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளக் கூடாது எனவும் சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. சளி காய்ச்சல் உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்பட்டால் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |