வாலிபர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள அந்தரப்பட்டி கிராமத்தில் வேல்முருகன்(32) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பிரியா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு சபிதா(9) என்ற மகள் உள்ளார். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு பிரியா இறந்துவிட்டதால் வேல்முருகன் குடிப்பழக்கத்துக்கு அடிமையானார். இந்நிலையில் தனது தாய் சுப்புலட்சுமியிடம் வேல்முருகன் மதுகுடிக்க பணம் கேட்டதாக கூறப்படுகிறது.
அதற்கு சுப்புலட்சுமி மறுப்பு தெரிவித்ததால் மன உளைச்சலில் இருந்த வேல்முருகன் தனது உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் உடனடியாக வேல்முருகனை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி வேல்முருகன் பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.