Categories
தேசிய செய்திகள்

தேர்வு எழுதிவிட்டு வெளியேவந்த….. 12ம் வகுப்பு மாணவனுக்கு…. பள்ளி வளாகத்தில் நேர்ந்த கொடூரம்….!!!!

ஆந்திர மாநிலம் திருப்பதியை சேர்ந்த வெங்கடேச சதீஷ் என்பவர் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் நேற்று ஆங்கில தேர்வு எழுத பள்ளிக்கு சென்றுள்ளார். பிறகு தேர்வை எழுதி முடித்துவிட்டு தனது நண்பர்களுடன் மகிழ்ச்சியாக வீட்டிற்கு சென்று கொண்டிருந்த போது திடீரென்று அவருக்கு நெஞ்சு வலிக்கிறது என சக மாணவர்களிடம் தெரிவித்துள்ளார். இதனால் மாணவர்கள் பள்ளி அருகே இருந்த காவலர்களிடம் தெரிவித்துள்ளனர். அவர்கள் உடனே ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்துள்ளனர்.

ஆனால் ஆம்புலன்ஸ் வருவதற்கு நேரமான காரணத்தினால் போலீஸ் தங்களது வாகனத்திலேயே மாணவனை அழைத்து மருத்துவமனைக்கு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதி விட்டு வெளியில் வந்த மாணவன் பள்ளி வளாகத்திலேயே மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |