Categories
கிரிக்கெட் விளையாட்டு

CSK அடுத்தடுத்து விக்கெட்….. ரசிகர்கள் அதிர்ச்சி….!!!

ஐபிஎல் 15வது சீசன் சுவாரசியமான கட்டத்தை எட்டியுள்ளது.இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் போட்டியில் சென்னை – மும்பை அணிகள் மோதுகின்றன. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது .அதில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது .அதன்படி சென்னை அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது .

நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 11 ஆட்டங்களில் ஆடி 4 வெற்றி, 7 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று 9-வது இடத்தில் இருக்கிறது.  முதலில் பேட்டிங் செய்து வரும் சென்னை அணி 2 ஓவரிலேயே 3 விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது. டேனியல் சான்ஸ் வீசிய முதல் ஓவரின் முதல் பந்தில் ருத்ராஜ் ஒரு ரன் எடுக்க 2வது பந்தை கன்வே எதிர்கொண்டார். அந்த  பந்தில் எல்பிடபிள்யூ ஆகிய வெளியேற அடுத்து வந்த மொயின் அலி நான்காவது பந்தில் டக் அவுட் ஆகி வெளியேறினார். இரண்டாவது ஓவரில் பும்ரா வீசிய நான்காவது பந்தில் உத்தப்பா அவுட்டாகி வெளியேறினார்.

Categories

Tech |