சர்வதேச விழாவில் சிறந்த நடிகைக்கான விருதை புர்கா திரைப்படத்தில் நடித்ததற்காக மிர்னாவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குனர் சர்ஜுன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் புர்கா. இத்திரைப்படத்தில் ஹீரோவாக கலையரசன் நடிக்க ஹீரோயினாக மிர்னா நடித்திருக்கின்றார். வேறு வேறு பின்னணியில் இருக்கும் இருவர் சந்தித்து பின் என்ன நடக்கப்போகிறது என்பதே படத்தின் கதையாகும். மேலும் இத்திரைப்படம் இஸ்லாமிய பின்னணியை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
படத்திற்கு சிவாத்மிகா இசையமைக்க பாலமுருகன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இந்தப்படம் பல திரைப்பட விழாக்களில் விருதுகளை பெற்ற நிலையில் அண்மையில் நியூயார்கில் நடைபெற்ற சர்வதேச விழாவில் இப்படம் திரையிடப்பட்டது. இதை தொடர்ந்து படத்தில் கதாநாயகியாக நடித்த மிர்னா சிறந்த நடிகையாக தேர்ந்தெடுக்கப்பட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இதனால் படக்குழுவினர் சந்தோஷத்தில் உள்ளனர்.