இலங்கை கடுமையான பொருளாதார நிலையை சந்தித்து வருகிறது. கடந்த இரண்டரை வருடங்களாக இலங்கையின் பொருளாதார நிலை தொடர்ந்து சரிந்து கொண்டிருக்கின்றது. அதிலும் முக்கியமாக இலங்கையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 207 ரூபாயாக இருக்கிறது. மேலும் சில இடங்களில் இது 250 ரூபாயை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது.
எங்கு பார்த்தாலும் வறுமை, பசி, பட்டினி என மொத்த இலங்கையும் கடும் பொருளாதார வீழ்ச்சியால் பாதிக்கப்பட்டு இருக்கின்றது. மேலும் அந்நிய செலவாணி கையிருப்பு கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இலங்கை மக்கள் பசி பட்டினியால் வாடி வதங்கி கொண்டிருக்கும் நிலையில் தமிழ்நாடு மக்களிடமிருந்து அன்புடன் என்ற வாசகத்துடன் அரிசி உள்ளிட்ட பொருட்களை தமிழக அரசு அனுப்புகிறது. தனது இன மக்களை கொத்து கொத்தாக கொன்று குவித்த போதும் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பதற்கு இணங்க தமிழர்கள் உதவி செய்கின்றனர்.