Categories
குழந்தை வளர்ப்பு மருத்துவம் லைப் ஸ்டைல்

இரத்த சோகை குறித்து பலருக்கும் தெரியாத சில விஷயங்கள்!

இரத்த சோகை என்பது இரும்புச்சத்துக் குறைபாட்டினால் ஏற்படுவதாகும்.

அதாவது உடலில் இரத்த சிவப்பணுக்களின் அளவு மிகவும் குறைவாக இருக்கும். இரத்த சோகையில் பல வகைகள் உள்ளன. அதில் பொதுவான ஒன்ற தான் இரும்புச்சத்துக் குறைபாடு. மனித உடலுக்கு இரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்வதற்கு இரும்புச்சத்து அவசியமான ஒன்று. எப்போது இரத்தத்தில் போதுமான இரும்புச்சத்து இல்லையோ, உடலுக்கு போதிய அளவு ஆக்ஸிஜன் கிடைக்காமல் போகும்.

இரத்த சோகை குழந்தைகளுக்கும் ஏற்படும். பார்த்துக்கொள்ளுங்கள் :

அவற்றி காரணங்கள்:

வைட்டமின் B12 கம்மியாகுவதால்.

இரும்புச்சத்தின் பற்றாக்குறை.

பாலிக் ஆசிட் குறைவாக இருப்பதால்.

இரத்த அணுக்களை அழிக்கும்  நோய்கள் ஏற்படும் காரணத்தால்.

அடிக்கடி வியாதிக்குள்ளாவது

சில எலும்பு மஜ்ஜையை பாதிக்கக்கூடிய வகை நோய்கள் ஏற்படும் பொழுது.

சரியான நேரத்தில் உணவு உட்கொள்ளாமல் இருப்பதால்.

காயம் மற்றும் உண்டாகும்போது வீணாகும் இரத்தம்.

மகப்பேறு காலத்தில் சரியான உணவு எடுத்து கொள்ளாததால்.

மாதவிடாய் காலத்தில் அதிக இரத்தப்போக்கு ஏற்படும் காரணத்தினாலும்.

இரத்த சோகையின் அறிகுறிகள்:

மார்பு வலி

உடல் எடை அதிகரித்தல்

சுவாசக் கோளாற

தோல் வெளிர்தல்

உடல் சோர்வு

முன்எச்சரிக்கை: 

இரத்த சோகை என்பது இரும்புச்சத்து குறைபாட்டினால் ஏற்படுவது. பலரும் போதுமான அளவில் இரும்புச்சத்து நிறைந்த உணவுப் பொருட்களான பசலைக்கீரை, பருப்பு வகைகள், பீன்ஸ், இறைச்சி வகைகளை சாப்பிடாமல் இருந்தால், இந்நிலை ஏற்படும். ஆகவே யாரெல்லாம் இரும்புச்சத்து குறைபாட்டினால் கஷ்டப்படுகிறார்களோ, அவர்கள் இம்மாதிரியான உணவுப் பொருட்களை உட்கொண்டால், இரும்புச்சத்து குறைபாட்டில் இருந்து விடுபடலாம்.

Categories

Tech |