Categories
தேசிய செய்திகள்

JUSTIN : தாஜ்மஹாலில் 22 கதவுகளை திறக்கக் கோரிய மனு….. தள்ளுபடி செய்த நீதிமன்றம்…..!!!!

தாஜ்மஹாலில் மூடப்பட்டிருக்கும் 22 அறைகளை திறக்கும்படி போடப்பட்ட மனுவை அலகாபாத் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

உத்திரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள உலக புகழ்பெற்ற உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகால் உள்ளது. அந்த தாஜ்மஹாலில் இருபத்தி இரண்டு அறைகள் மூடி வைக்கப்பட்டுள்ளன. அந்த அறைகளை திறக்கும்படி லக்னோ கிளையில் பாஜகவை சேர்ந்த ரஜ்னீஷ் சிங் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் துறவியரும் இந்து அமைப்புகளை சேர்ந்தவரும் தாஜ்மஹாலில் ஒரு காலத்தில் புகழ் பெற்ற சிவன் கோயிலாக இருந்தது என கூறி வருகின்றனர்.

தேஜோ மகாளயா என்ற பெயரில் இருந்த சிவன் கோவில்தான் தாஜ்மஹால் மாற்றப்பட்டுள்ளதாக அவர்கள் கூறுகின்றனர். எனவே தாஜ்மஹாலில் மூடி வைக்கப்பட்டுள்ள 22 அறைகளை திறக்க வேண்டும் எனவும், அங்கு ஹிந்து தெய்வங்களின் சிலை உள்ளதா என்பதை பற்றி ஆய்வு செய்ய வேண்டும் எனவும் அந்த மனுவில் தெரிவித்திருந்தார். இந்த வழக்கை விசாரணை செய்த அலகாபாத் நீதிமன்றத்தின் லக்னோ கிளை மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

Categories

Tech |