ஐரோப்பிய நாடான பின்லாந்து உக்ரைன் போரை தொடர்ந்து நோட்டா அமைப்பில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளது.
வடக்கு அட்லாண்டிக் உடன்படிக்கை அமைப்பான நோட்டா அமைப்பில் இணைவதற்கு பின்லாந்து அதிபர் பச்சை கொடி காட்டி உள்ளதாக கூறப்பட்டு இருக்கிறது. நோட்டா ராணுவக் கூட்டணியில் பின்லாந்து சேர்வதற்கு அதிபர் சவ்லி நினிஸ்டோ இன்று ஒப்புதல் வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பை அடுத்து பாதுகாப்புக் கொள்கையில் ஏற்பட்டிருக்கும் ஒரு பெரிய மாற்றம் இதுவாகும்.
ரஷ்யாவுடன் 1300 கிலோ மீட்டர் எல்லையையும் கடினமான கடந்தகால வரலாற்றையும் கொண்டுள்ள ஐரோப்பிய நாடான பின்லாந்து, உக்ரைன் போரை தொடர்ந்து நோட்டா அமைப்பில் இணைய விருப்பம் தெரிவித்து இருக்கின்றது. 2014இல் கிரிமியாவை ரஷ்யாவுடன் இணைந்து கொண்டதிலிருந்து பின்லாந்து ஒரு கூட்டணியாக நோட்டா அமைப்புடன் தனது ஒத்துழைப்பை படிப்படியாக உயர்த்தி வந்தது.
ஆனால் அது ரஷ்யா உட்பட அதன் கிழக்கு அண்டை நாடுகளுக்கு நட்புறவை பேணுவதற்காக நோட்டாவின் சேர்வதைத் தவிர்த்து உள்ளது. தற்போது பின்லாந்துவெளியுறவுத் துறை தலைவரும் அந்த நாட்டு அதிபருமான சவ்லி நினிஸ்டோ அந்த நாட்டு சட்டத்திற்கு உட்பட்டு அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் நோட்டா அமைப்பில் சேர முடிவெடுத்து இருக்கிறார். அவரது இந்த முடிவே இறுதியானதாக பார்க்கப்படுகின்றது. மேலும் இந்த முடிவிற்கு பின் வந்த அரசும் நாடாளுமன்றமும் விரைவில் ஒப்புதல் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.