இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு வழங்க 40 ஆயிரம் டன் அரிசி கொள்முதல் செய்ய அரசு முடிவு செய்துள்ளதாக சட்டமன்றத்தில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். ஆனால் இந்த அரிசி அதிக விலைக்கு வாங்கப்பட்டதாக கூறி ஜெய்சங்கர் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளார். அந்த மனைவியில் அரிசி கொள்முதலுக்கு ஒப்புதல் அளித்து பிறப்பித்த அரசாணைக்கு தடை விதிக்க வேண்டும் என கூறியிருந்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், இலங்கைக்கு வழங்குவதற்காக அதிக விலைக்கு 40 ஆயிரம் டன் மெட்ரிக் டன் அரிசி கொள்முதல் செய்ய ஒப்புதல் அளித்த அரசாணைக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மத்திய அரசின் அனுமதியுடன் தான் அரிசி அனுப்பப்படுகின்றது.அவசரநிலை நேரங்களில் கொள்முதல் செய்ய டெண்டர் வெளிப்படைத்தன்மை சட்டத்தில் விளக்கு உள்ளது என்று கூறினார்.இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் வழக்கில் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என்று கூறி விசாரணையை ஜூன் மாதத்திற்கு ஒத்தி வைத்துள்ளனர்.