மரியுபோலில் ரஷ்ய தாக்குதலின் போது கை கால்களை இழந்துள்ள அசோவ் படையை சேர்ந்த வீரர்களின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
உக்ரைன் நாட்டில் மரியுபோல் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்தப் பகுதியிலிருந்த பொதுமக்கள் மனிதாபிமான அடிப்படையில் வெளியேற்றப்பட்டனர். ஆனால் அங்கு முகமிட்டுள்ள அசோவ் படை பிரிவினரை வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். இவர்கள் தீவிர வலதுசாரி சித்தாந்தம் கொண்ட ராணுவ குழுவினரால் அமைக்கப்பட்டவர்கள். மேலும் இவர்கள் கடந்த 8 வருடங்களாக டான்பாஸ் என்ற இடத்தில் ரஷ்ய ஆதரவு பிரிவினைவாத இயக்கங்களுடன் போராடு வருவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் மரிய போல் உருக்கலையில் சிக்கியுள்ள அசோவ் படையினரின் மீது ரஷ்ய ராணுவ படைகள் தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் கை கால்களை இழந்த வீரர்களின் புகைப்படங்களை அசோவ் படையினர் வெளியிட்டுள்ளனர்.