ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனருமான சந்தோஷ் சிவன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் திரைப்படம் “சென்டிமீட்டர்” ஆகும். இந்த படத்தில் “அசுரன்” திரைப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்த மஞ்சுவாரியர் கதையின் நாயகியாக நடிக்கிறார். மேலும் அவருடன் நெடுமுடிவேணு, யோகிபாபு, காளிதாஸ் ஜெயராம், கோகுல் ஆனந்த் ஆகிய பலர் நடிக்கின்றனர். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த திரைப்படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய், ராம் சுரேந்தர், கோபி சுந்தர் என 3 இசை அமைப்பாளர்கள் இசையமைத்திருக்கின்றனர்.
படத் தொகுப்பை லாரன்ஸ் கிஷோர் மேற்கொண்டு இருக்கிறார். இப்படத்தை ஸ்ரீகோகுலம் மூவிஸ் நிறுவனம் மற்றும் ஷிவாஸ் பிலிம்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்து இருக்கிறார்கள். இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து இறுதிகட்ட பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் “சென்டிமீட்டர்” படத்தின் பர்ஸ்ட்லுக் இப்போது வெளியாகி இருக்கிறது. இதை தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனரான மணிரத்னம் வெளியிட்டு இருக்கிறார். இந்த போஸ்டர் சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
