கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டத்தில் உள்ள கருப்பகவுண்டன்புதூரில் முருகேசன்(48) என்பவர் வசித்து வருகிறார்.இவருக்கு சிவகாமி(45) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு தீபா(20) என்ற மகள் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான முருகேசன் அடிக்கடி தனது குடும்பத்தினருடன் தகராறு செய்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த சிவகாமி தோட்டத்திற்கு சென்று வருவதாக முருகேசனிடம் கூறிவிட்டு தனது மகளுடன் ஸ்கூட்டரில் சென்றுள்ளார்.
அங்கு சிவகாமியும், தீபாவும் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து மயங்கி கிடந்தனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் இரண்டு பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி தீபா பரிதாபமாக இறந்துவிட்டார். அங்கு சிவகாமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.