Categories
உலக செய்திகள்

ஐ.நா சபையில் இந்தி மொழியை ஊக்குவிக்க…. 6 கோடி நிதி வழங்கிய இந்திய அரசு…!!!

ஐநா சபையில் இந்தி மொழியை ஊக்குவிப்பதற்காக இந்தியா சார்பாக 8 லட்சம் அமெரிக்க டாலர்கள் நிதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ஐநா சபையில் இந்தி மொழியை ஊக்குவிப்பதற்காக இந்தியா சார்பாக சுமார் 6.18 கோடி ரூபாய் நிதி வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நியூயார்க் நகரில் இருக்கும் ஐநா சபைக்கான இந்திய தூதரகம் வெளியிட்டிருக்கும் செய்தியில், கடந்த 2018 ஆம் வருடத்திலிருந்து ஐ.நா சபை செய்திகளை இந்தி மொழியில் மொழி பெயர்த்து, உலகநாடுகள் முழுக்க இந்தி பேசக்கூடிய லட்சக்கணக்கான மக்களிடம் கொண்டு சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதற்கென்று, ஐ.நா சபைக்கான இந்திய தூதராக இருக்கும் ரவீந்திரா, ஐ.நாவின் உலகளாவிய தகவல் தொடர்பு துறை துணை இயக்குனரான மிடா ஹோசலி என்பவரிடம் 8 லட்சம் அமெரிக்க டாலர்கள் கொண்ட காசோலையை கொடுத்ததாக கூறப்பட்டிருக்கிறது.

Categories

Tech |