Categories
சினிமா தமிழ் சினிமா

அடக்கடவுளே…. இவங்களுக்கா லாக்டவுன் சமயத்தில் பணக்கஷ்டம்…. திரைத்துறையில் பெரும் அதிர்ச்சி…!!!!!!!

கமல் ஹாஸனின் முன்னாள் மனைவி சரிகா லாக்டவுன் சமயத்தில் பணத்துக்காக மிகவும் சிரமப்பட்டதாக கூறிய செய்தி பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலக நாயகன் கமல்ஹாசனும் நடிகை சரிகாவும்  காதலித்து கடந்த 1998ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டுள்ளனர். இவர்கள் இருவருக்கும்  ஸ்ருதிஹாசன் மற்றும் அக்ஷாரா ஹாசன் ஆகிய  இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இந்த நிலையில் கடந்த 2004ஆம் வருடம் கருத்துவேறுபாடு காரணமாக நடிகர் கமல்ஹாசனை  சரிகா விவாகரத்து செய்துள்ளார். அதன் பின்னரும் ஒரு சில பாலிவுட் திரைபடங்களில் நடித்து வந்தார்.

இந்த நிலையில் நடிகை சரிகா தான் லாக்டவுன் காலத்தில் பணத்திற்காக மிகவும் கஷ்டப் பட்டதாக சமீபத்திய பேட்டியில் கூறியது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஒரு பக்கம் கமல்ஹாசன் கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார். மற்றொரு பக்கம் கமல்ஹாசனின் மகள்களும் திரைப்படங்களில் நடித்து லட்சக்கணக்கில் சம்பாதித்துக் கொண்டிருக்கின்ற நிலையில் கமல்ஹாசனின் முன்னாள் மனைவி சரிகா பண கஷ்டத்தால் தவிப்பதாக கூறியுள்ளது திரைத்துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

மேலும் லாக்டவுன் காலத்தில் ஒரு நாளைக்கு 2000 ரூபாய் சம்பளத்தில் நாடகத்தில் நடித்ததாகவும் தெரிவித்துள்ளார். மகள்கள் இருவரும் திரைத்துறையில் இருக்கும்போது 2000 ரூபாய் தொகைக்காக சரிகா சினிமாவில் நடித்ததாக தெரிவித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Categories

Tech |