மழைக்கு தாக்கு பிடிக்காமல் சுற்றுசுவர் இடிந்து விழுந்து கார் கண்ணாடி சுக்குநூறாக நொறுங்கியது.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் மழை பெய்தது. இந்நிலையில் தொடர்ந்து பெய்த மழையால் ஆவடியில் இருக்கும் தாசில்தார் அலுவலக சுற்றுச்சுவர் திடீரென இடிந்து விழுந்தது. மேலும் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மீது சுற்றுசுவர் விழுந்ததால் அதன் கண்ணாடி சுக்குநூறாக நொறுங்கியது. இதில் எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை. இதனை அடுத்து தரமற்ற முறையில் சுவர் கட்டப்பட்டதால் மழைக்கு தாக்கு பிடிக்காமல் இடிந்து விழுந்ததாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.