பெய்ஜிங்கில் உள்ள புகழ்பெற்ற அரண்மனை கொரோனா நோய்த் தொற்றினால் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
சீனா நாட்டின் பெய்ஜிங் என்ற நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்தில் தியனன்மென் சதுக்கத்தின் தெற்கே சுமார் 183 பரப்பளவில் 9999 அறைகளை கொண்ட அரண்மனை 17 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் அரண்மனை அமைந்துள்ள பகுதியை சுற்றி கொரோனா நோய்த்தொற்று அதிகரித்து உள்ளது. இதனாால் நாளை முதல் இந்த அரண்மனை மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பெய்ஜிங் வணிக வளாகம் அனைத்தும் மூடப்பட்ட நிலையில், மக்கள் தங்கள் வீட்டிலிருந்தே பணிபுரியுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.