சாலையோர பள்ளத்தில் கார் பாய்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவில் காதர்பாட்ஷா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நவீலா பாத்திமா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் காதர்பாட்ஷா தனது மனைவி மற்றும் குழந்தையுடன் காரில் தமிழகத்தில் செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள அச்சரப்பாக்கத்தில் உள்ள உறவினர் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்துள்ளார். இதனையடுத்து அவர்கள் அச்சரப்பாக்கத்தில் இருந்து வேலூருக்கு சொகுசு காரில் சுவீட் வாங்குவதற்காக சென்றுள்ளனர்.
இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள மேல்மருவத்தூர் நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தபோது பிருதூர் பகுதியில் பாலம் விரிவுப்படுத்தும் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் திடீெரன காதர்பாட்ஷா ஒட்டி வந்த கார் பாய்ந்து விபத்துக்குள்ளானது.
இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் விரைந்து சென்று காரில் இருந்த காதர்பாட்ஷா, நவீலா பாத்திமா மற்றும் ஒரு குழந்தையை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த வந்தவாசி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.