இந்திய தூதரகம் இலங்கையில் நடக்கும் கலவர சம்பவங்களை கட்டுப்படுத்துவதற்காக நாங்கள் படை அனுப்பப் போவதில்லை என்று தெரிவித்திருக்கிறது.
இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டு வருகிறது. ஒவ்வொரு நாளும் மக்களின் போராட்டங்கள் தீவிரமடைந்து கொண்டிருக்கிறது. மேலும், போராட்டங்கள் வன்முறையாக மாறி பேருந்துகள் தீ வைத்து ஏரிக்கப்பட்டிருக்கின்றன. மேலும் தமிழகத்திற்குள் தேச விரோத சக்திகள் நுழைய வாய்ப்பிருக்கிறது என்று ஒன்றிய உளவுத்துறை எச்சரித்திருக்கிறது.
இந்நிலையில் இலங்கையில் நடக்கும் கலவர சம்பவங்களை தடுப்பதற்காக இந்தியாவிலிருந்து படைகள் அனுப்பப்படுகிறது என்று இணையதளங்களில் தகவல்கள் பரவியது. ஆனால், இந்திய தூதரகம் இந்த தகவலை முற்றிலுமாக மறுத்திருக்கிறது.