Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“OVER SPEED” 2 WHEELER மீது மோதிய கார்….. வாலிபர் மரணம்…. உறவினர்கள் சாலைமறியல்…!!

கள்ளக்குறிச்சியில் மோட்டார்சைக்கிள் மீது கார் மீது மோதிய விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் உயிரிழந்தார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் செஞ்சி பகுதியை அடுத்த ஊரணிதாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ். இவர் செஞ்சியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் பிரகாஷும் சிவாவும் செஞ்சி செல்லும் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே வந்த கார் ஒன்று இவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் பிரகாஷ் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழக்க  சிவா படுகாயமடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த ஊர் மக்கள் மற்றும் பிரகாஷ் உறவினர்கள் சிவாவை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விட்டு விபத்தை ஏற்படுத்திய காரை சுற்றி வளைத்து காரை தாக்கி போராட்டம் நடத்தினர்.

இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் போராட்டம் நடத்தியவர்களை சமாதானப்படுத்தி, பிரகாஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |