மதுரை அழகர் கோயில் சாலை பகுதியிலுள்ள கோர்டியார்ட் விடுதியில் பா.ஜ.க சார்பாக ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் மாநில செயலாளர் அண்ணாமலை உட்பட பலர் பங்கேற்றனர். இந்த நிலையில் மாநில நிர்வாகிகளை வரவேற்பதற்காக அழகர் கோயில் சாலையில் அனுமதி இன்றி 30க்கும் மேற்பட்ட பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தது. இதனால் மாநகராட்சியின் பணியாளர்கள் அதைஅகற்றியபோது பாஜக-வினர் மறியலில் ஈடுபட்டனர். இந்நிலையில் பா.ஜ.க. மாவட்ட தலைவரான சரவணன் தலைமையிலான பாஜக-வினர் மாநகராட்சி பணியாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து காவல்துறையினர் பாஜகவினரை தடுத்து நிறுத்தினர்.
அதனை தொடர்ந்து காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து அவர்கள் கலைந்துசென்றனர். இந்நிலையில் பொதுஇடத்தில் அனுமதி இன்றி பேனர் வைத்ததாக தல்லாகுளம் போலீஸ் நிலைய சார்பு ஆய்வாளர் புகாரின் அடிப்படையில் 25 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. முன்பாக தமிழக பா.ஜ.க. மாவட்ட தலைவர்களை மாற்றியமைக்கப்படும் என்று தமிழக பா.ஜ.க., மாநில தலைவர் அண்ணாமலை கடந்த இருவாரங்களுக்கு முன்பு அறிவித்தார். அதன்பின் பா.ஜ. கட்சியின் மாநில துணைத் தலைவர்கள், மாநில பொதுச் செயலாளர்கள், மாநில செயலாளர்கள், கட்சியின் பல பதவிகளுக்கு புது நிர்வாகிகளை நியமித்து அண்ணாமலை சென்ற வாரம் உத்தரவு பிறப்பித்தார்.
அதனைத்தொடர்ந்து தமிழ்நாடு பா.ஜ.க.வின் மாநிலஅளவிலான ஆலோசனைக் கூட்டமானது மதுரையில் நேற்று நடந்தது. மதுரை அழகர் கோயில் சாலையிலுள்ள தனியார் விடுதியில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் பாஜக மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள், மாநில அணி தலைவர்களும் பங்கேற்றனர். அதுமட்டுலாமல் ஆலோசனை கூட்டத்துக்கு பாஜக தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கினார். பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்துக்காக அழகர் கோயில் பகுதியில் சுமார் அரை கிலோ மீட்டர் தூரம் பா.ஜ.க சார்பாக போஸ்டர்கள், பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தன.
எனினும் மதுரை மாநகராட்சி நிர்வாகத்திடம் அனுமதி பெறவில்லை என்று கூறி பேனர்களை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு இருக்கின்றனர். அவர்களை பாஜகவினர் தாக்க முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பின் கட்சிப் பேனர்களை அகற்றியதைக் கண்டித்து பாஜகவினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து அவர்கள் கலைந்துசென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.