ஆஸ்திரேலியாவில் பயணிகள் ரயில் ஒன்று தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஐரோப்பிய நாட்டில் வியன்னா என்ற இடத்திலிருந்து பயணிகள் ரெயில் ஒன்று புறப்பட்டுள்ளது. இந்த ரெயிலில் 100-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்துள்ளனர். இந்த ரெயில் வியன்னா அருகே உள்ள முயன்சென்டார்ப் நகரில் சென்று கொண்டிருந்தபோது திடீரென தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
இந்த 2 ரெயில் பெட்டிகள் தண்டவாளத்துக்கு அருகில் உள்ள வயல் வெளியில் உருண்டு கவிழ்ந்து விழுந்தன.
இந்த ரெயில் பெட்டிகளில் இருந்த பயணிகள் இடிபாடுகளில் சிக்கி நசுங்கினர். இதனை அடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த ரெயில்வே ஊழியர்கள் மற்றும் மீட்பு குழுவினர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீவிரமாக மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இந்த விபத்தில் 2 பயணிகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 15 பேர் படுகாயமடைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.